Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆனால் எப்படி இருக்கும்- பிரபல இயக்குனர் ஏக்கம்

அஜித்தின் 50வது படம் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் வெங்கட் பிரபுவோ அஜித்தை வில்லனாக மாஸாக காட்டி வெற்றி கண்டார்.

மங்காத்தா இந்த பெயரை கேட்டாலே ரசிகர்களுக்கு குஷி தான். இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருக்க இரண்டாம் பாகத்திற்கு நான் தயார் என்று மட்டும் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

அஜித் கிரீன் சிக்னல் கொடுத்தால் உடனே படம் தயாராகும் என தெரிகிறது. தற்போது தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பாகி வருகிறது, ஒரு காட்சியை புகைப்படம் எடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் டுவிட்டரில், முதல் நாள் முதல் காட்சி இப்படத்தின் திரையரங்க மாஸை மறக்க முடியாது. மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆக விரும்புகிறேன் என பதிவு செய்துள்ளார்.