Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பள்ளி காதலை அழகாக காட்டிய 96 படத்தின் கிளைமேக்ஸ் இதுதான்- விஜய் சேதுபதி

இயக்குனர் பிரேம் குமார் இயக்க விஜய் சேதுபதி-திரிஷா நடித்த படம் 96. பள்ளி காதலை மிகவும் அழகாக காட்டியிருந்த இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

அண்மையில் படக்குழு படத்தின் 100வது நாளை கொண்டாடினார்கள். அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், இளையராஜா நிகழ்ச்சிக்காக ஸ்பெஷலாக தயார் செய்த சட்டையுடன் இங்கே வந்துள்ளேன்.

யமுனை ஆற்றிலே பாடலின் ஒரிஜினலை விட இந்தப் படத்தில் அந்த பாட்டு எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்தேன். அந்த காட்சி பார்த்ததும் இயக்குனர் காலை தொட்டு கும்பிட நினைத்தேன்.

படத்தில் ஒரு முறையாவது கட்டி பிடிக்க மாட்டார்களா என்று ஆர்வமாக இருந்திருப்போம், அது இங்கே நடக்க இருக்கிறது என்று கூறி திரிஷா-விஜய் சேதுபதியை மேடை ஏற்றி கட்டிப்பிடிக்க வைத்துள்ளார் பார்த்திபன். பின் விஜய் சேதுபதி இதுதான் படத்தோட கிளைமேக்ஸ் என்று கூறினார்.