ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலக தமிழர்களையே கவர்ந்து இழுத்தவர். ஆனால், அதன் பிறகு இவர் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பதே பலருக்கும் வருத்தம்.
ஒரு வழியாக 90ml என்ற படத்தில் கமிட் ஆனார், ஆனால், அந்த படத்தில் ட்ரைலரை பார்க்கும் போது ஓவியா ஆர்மிக்கே கொஞ்சம் அதிர்ச்சி தான்.
அந்த அளவிற்கு முத்தக்காட்சிகள், படுக்கறை காட்சிகள் நிறைந்து இருந்தது, இந்நிலையில் இந்த ட்ரைலரை பலரும் திட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் அதுவே செம்ம விளம்பரமாகவும் அமைந்துவிட்டது, ஆம், இந்த ட்ரைலரை தற்போது வரையே 4.5 மில்லியன் பேர் பார்த்துள்ளார்களாம்.
ஒரு ஹீரோயின் ட்ரைலருக்கு இப்படி ஒரு வரவேர்பு கிடைப்பது இதுவே முதன் முறையாம்.