Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் டிரைலர் வெளியாகவுள்ள தேதி! கலக்கலான தேதி

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் Mr.லோக்கல் படம் வேகமாக உருவாகி வருகின்றது. இந்த படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வந்த நிலையில் அவருக்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து சில தினங்களுக்கு முன்னர் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச்சை பரிசாக அளித்து விடைப்பெற்றார்.

இன்னும் ஒரே ஒரு சிவகார்த்திகேயனுக்கான சோலோ பாடல் மட்டும் படமாக்கபட வேண்டிய நிலையில் Mr.லோக்கல் படத்தின் டிரைலர் வருகின்ற 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த 3ஆம் தேதி சிவகார்த்திகேயன் சினிமாக்குள் வந்து 7 வருடங்கள் நிறைவடைந்ததை ஞாபகப்படுத்தும் விதமாக படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.