விக்ரம் தன் மகன் துருவ் விக்ரமை பெரிய அளவில் தமிழ் திரையுலகில் கொண்டு வரவேண்டும் என்று விரும்பியுள்ளார். இதனால், அவர் தன் குருநாதர் பாலாவை வைத்தே துருவை இயக்க முடிவு செய்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி ரீமேக் ரைட்ஸை வாங்கி பரபரப்பாக பாலா படம் எடுத்து ரிலிஸிற்கு வரும் நேரத்தில் இப்படம் வராது, எங்களுக்கு படத்தில் திருப்தியில்லை, அதனால், மீண்டும் வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்குவேன் என்று தயாரிப்பாளர் கூறினார்.
இதற்கு பாலாவும் மறுப்பு கடிதம் அனுப்பியது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி வர்மா படத்தை சமீபத்தில் திரையிட்டு பார்த்துள்ளனர்.
அர்ஜுன் ரெட்டி தெலுங்கில் சுமார் 3 மணி நேரம் ஓடும், ஆனால், தமிழில் 2 மணி நேரமாக தான் வந்துள்ளது, இதுவே விக்ரமிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதை தொடர்ந்து இதைப்பற்றி வாக்குவாதம் நடத்தை இறுதியில் பிரச்சனையில் முடிந்து படம் ட்ராப் ஆனதாக கூறப்படுகின்றது.