Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னுடைய கடைசி ஷோ இந்த நடிகருடன் தான் இருக்க வேண்டும், டிடி ஓபன் டாக்

சின்னத்திரையில் தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்றால் TRP எகிறும்.

அந்த வகையில் டிடி சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து 20 வருடம் ஆகிய நிலையில், அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவரும் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் நிலையில், ஒரு பேட்டியில் ‘உங்களின் கடைசி ஷோ யாருடன் இருக்க வேண்டும்?’ என்று கேட்டுள்ளனர்.

அதற்கு டிடி ‘அஜித் சாருடன்’ என்று பதில் அளித்துள்ளார். மேலும், ரஜினி சாரிடம் பேட்டி எடுத்தது தான் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.