Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதியின் 63வது படத்தில் இந்த பிரபல அரசியல் பிரமுகர் நடிக்கிறாரா?

அட்லீ, விஜய்யை வைத்து இயக்கும் 3வது படம் படு பயங்கரமாக தயாராகி வருகிறது. மெர்சல் படத்தில் மருத்துவம் குறித்து பேசிய அட்லீ இப்படத்தில் விளையாட்டில் நடக்கும் சில மோசமான விஷயங்களை வெளிக்காட்ட இருக்கிறாராம்.

இப்படத்தில் விஜய்யை தாண்டி விளையாட்டு நாயகிகளாக நடிக்கும் 16 பெண்களும் ஹைலைட் தான். அவர்கள் யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை, ஆனால் மற்ற விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிறது. நேற்று நயன்தாரா மார்ச் 2ம் வாரத்தில் இருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக தெரிவித்தோம்.

தற்போது வந்த புது தகவல் என்னவென்றால் படத்தில் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சித் சம்பத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அட்லீ படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரும் என்று அவரது பி.ஆர். ஓ கூறியதாக நாஞ்சித் சம்பத் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த பட வாய்ப்பு தளபதி 63 படத்திலா? அல்லது அட்லீ தயாரிக்கும் படத்திலா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

loading...