Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலம் கடந்தும் சுப்ரமணியபுரம் படத்திற்கு வட இந்திய மண்ணில் கிடைத்த பெருமை

சசிகுமார் இயக்கி நடித்த முதல் படம் சுப்ரமணியபுரம். இப்படம் தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ட்ரெண்ட் செட்டிங் படமாக அப்போது இருந்தது.

இந்நிலையில் காலம் கடந்தும் இப்படத்திற்கு வட இந்தியாவில் மிகப்பெரும் பெருமை கிடைத்துள்ளது.

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யூப் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதில் நான் கேங்ஸ்டர் படமெடுக்க மிகவும் உதவியாக இருந்தது சுப்ரமணியபுரம் தான், இப்படம் நாளை மும்பையில் திரையிடப்படுகின்றது, அனைவரும் வந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.