Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யே படம் இயக்க கேட்டும் செய்ய மறுத்த பிரபல இயக்குனர்- இதுவரை வெளிவராத தகவல்

இளைய தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குவது என்பது ஒரு பெரிய விஷயம். அவர் படத்தில் ஒரு காட்சியில் நடித்தால் கூட போதும் அவர்களுக்கு சினிமாவில் நல்ல ரீச் கிடைக்கும்.

தளபதி 63 படம் சென்னையில் நடைபெற்று வருகிறது, அடுத்தக்கட்டம் என்ன என்பது விரைவில் வெளியாகும். இந்த நேரத்தில் நடிகர் விஜய் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் பார்த்திபன்.

அதில் அவரிடம் பெரிய நடிகர்களை இயக்குவதில்லை ஏன் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதுவும் அவரே 3 Idiots படத்தை நான் தான் இயக்க வேண்டும் என்று கூறியிருந்தார், ஆனால் நான் மறுக்கவே அந்த வாய்ப்பு ஷங்கரிடம் சென்றது.

விஜய்யை வைத்து இப்படிபட்ட படத்தை எடுக்க விரும்பவில்லை, அது வேறொரு படமாக இருக்க வேண்டும், கண்டிப்பாக அவரை இயக்குவேன் என்று கூறியுள்ளார்.