Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் 59வது படத்தில் அந்த ஒரு விஷயம் நிஜத்தில் நடந்தால் சந்தோஷமாக இருக்கும்- பிரபல நடிகரின் ஆசை

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் 59வது பட வேலைகளில் இருக்கிறார். படப்பிடிப்பிற்கு நடுவே அவர் துப்பாக்கி பயற்சி எடுப்பது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவருடைய என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் பெரிய ரீச்சை பெற்றவர் அருண்விஜய். அதற்கு முன் அவர் படங்கள் நடித்தாலும் இப்படமே பெரிய பெயர் கொடுத்தது, அவருடைய கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் ரசித்தார்கள்.

தடம் அருண் விஜய் நடிப்பில் புதிதாக வெளியாகியுள்ள படம். இப்பட புரொமோஷனுக்கான பேட்டி கொடுத்த இவரிடம் தல 59வது படம் குறித்து வதந்தி கிளப்ப வேண்டும் எனில் என்ன கூறுவீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் வதந்தி ஏன் நிஜமாகவே அவர் படத்தில் நடிக்கிறேன் என்றால் சந்தோஷம் தான் என்று கூறியுள்ளார்.