Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னை அசிங்கப்படுத்திய பிரபலத்துடன் மேடையிலேயே சண்டை போட்ட நடிகை- பரபரப்பான நிகழ்ச்சி

கதிர் நடிப்பில் சத்ரு என்ற படம் உருவாகியுள்ளது. அம்பரீஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நாயகியாக சிருஷ்டி நடித்துள்ளார்.

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் அண்மையில் நடந்தது. நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் பேசும்போது, முதலில் 4 பாடல்கள் கூறினார்கள், பின் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் படத்தில் ஒரு பாடலும் இல்லை, எனக்கு வேலையே இல்லை.

ஆனால் சில காரணங்களுக்காக தான் பாடல்கள் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டேன்.

என்னைப் போல் படத்தில் நடிகை சிருஷ்டிக்கும் வேலையே இல்லை, ஹீரோவுக்கான படம் இது என்று கூறினார்.

இதைக் கேட்டதும் கோபமான நடிகை சிருஷ்டி மேடையிலேயே இசையமைப்பாளருடன் சண்டை போட்டுள்ளார். இதனால் நிகழ்ச்சி கொஞ்ச நேரம் பரபரப்பாக இருந்தது.