Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த பட தயாரிப்பில் நிதின் சத்யா- வைபவ் நாயகனாக நடிக்கிறாரா?

சென்னை 28 படத்தில் நடித்தவர்களை யாரும் மறந்திருக்க மாட்டோம். அந்த படத்தில் பொறுப்புள்ள அண்ணனாக நடித்து இப்போது தயாரிப்பாளராக வலம் வருபவர் நிதின் சத்யா.

இவர் ஜெய் நடித்த ஜருகண்டி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார், தற்போது அடுத்த பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். இப்படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதை என்றும் வைபவ் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அவருடன் இணைந்து சில முன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.

ஆனால் மற்றபடி பட இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் என யாரை பற்றியும் தகவல்கள் வரவில்லை.