சர்கார் படத்தில் விஜய் சொன்னது நிஜத்திலேயே நடந்துவிட்டது- இதுவே ஒரு உதாரணம், கொண்டாடும் ரசிகர்கள்
விஜய்யின் நடிப்பில் கடைசியாக வந்த படம் சர்கார். முருகதாஸ் இயக்கிய இப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தன, குறிப்பாக அரசை தவறாக சித்தரித்துள்ளார்கள் என்று பெரிய போராட்டமே நடந்தது.
பின் பிரச்சனைகள் சுமூகமாக முடிய படமும் நன்றாக ஓடியது. இதில் முக்கியமாக படக்குழு கூறியிருப்பது 49P. படம் பார்ப்பதற்கு முன் யாருக்கும் இது தெரிந்திருக்காது என்பது உண்மை.
தேர்தலில் உங்களது வாக்குகளை யாராவது பதிவிட்டால் 49Pல் புகார் அளிக்கலாம். படத்தில் கூறப்பட்ட முக்கியமான இந்த விஷயத்தை தற்போது முதன்முறையாக தேர்தல் ஆணையம் பிரபலப்படுத்தியுள்ளது.