Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெறி தெலுங்கு ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது இந்த முன்னணி நடிகர் தானாம்!

விஜய் அட்லீயின் கூட்டணியில் உருவான முதல் படம் தெறி. சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு கதாநாயகிகள் விஜய்க்கு இந்த படத்தில்.

ரசிகர்களிடமும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை தெலுங்கு ரீமேக் செய்வதற்கான பேச்சு வார்த்தை சில மாதங்களாகவே நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த ரீமேக்கிற்கான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. அதன்படி இந்த ரீமேக்கில் விஜய்யின் ஹீரோ கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ரவி தேஜா நடிக்கவுள்ளாராம். கண்டிரீகா பட இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ள இந்த ரீமேக் படத்தில் முதலில் பவன் கல்யாண் நடிக்கவிருந்தார், ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் வாய்ப்பு ரவி தேஜா பக்கம் சென்றது.

மேலும் விஜய்யின் துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் ரீமேக் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.