Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை குறித்து ஒரு சூப்பர் அப்டேட்- இரண்டு நாள் மட்டும் தானா?

அஜித் சிவா கூட்டணியில் 4வது முறையாக வெளியான படம் விஸ்வாசம். படத்தின் வரவேற்பு, வசூல் எப்படி இருந்தது என்பதை 10வது வாரத்திலும் நாம் பார்த்து வருகிறோம்.

இந்த படத்தையடுத்து அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் தான். பெண்களுக்கான முக்கிய கதையாக அமைந்துள்ள இப்படத்தில் அஜித்திற்கு தரமான சீன் ஒன்றும் இருக்கிறது, அதை சமீபத்தில் அஜித் நடித்து முடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தற்போது என்ன விஷயம் என்றால் பாலிவுட் நடிகை வித்யா பாலன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். அவரும், அஜித்தும் இருக்கும் காட்சிகள் இந்த இரண்டு நாட்களில் எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.

இப்படமே தயாரிப்பாளர் போனி கபூர் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்ட வித்யா பாலன் இரண்டு நாள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.