Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீ இயக்கும் விஜய்யின் 63வது படத்தின் கதை இதுதானா?- லீக்கான தகவல்

அட்லீ-விஜய் மூன்றாவது கூட்டணியில் தயாராகும் படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தியது. சென்னையை சுற்றி சுற்றி படப்பிடிப்பு நடக்கிறது, அந்த இடத்திலும் ரசிகர்கள் கூடிவிடுகின்றனர்.

படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வர படத்தின் கதை இதுதான் என்று ஒரு கதை சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

என்ன கதை என்றால், விஜய்-கதிர் இருவரும் நண்பர்கள். கால்பந்து வீரர்களான இருவரும் பின்னாளில் கால்பந்து பயிற்சியாளராக மாறுகிறார்களாம். அப்போது கதிர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட அவருடைய மரணத்தின் காரணத்தை விஜய் கண்டுபிடிக்கிறார்.

வில்லன்களை பழிவாங்குவதோடு கதிர் பயிற்சி கொடுத்த கால்பந்து அணியை எப்படி சாம்பியன் ஆக்குகிறார் என்பதுதான் கதை என கூறப்படுகிறது.