Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த வெற்றி! கனா படத்தின் ஒத்தயடி பாதயில பாடல் செய்த பெரும் சாதனை

சிவகார்த்திகேயனுக்கு இந்த வருடம் 3 க்கும் அதிகமான படங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜேஷ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது மித்ரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பாண்டிராஜ் மற்றும் மற்றொரு முக்கிய இயக்குனருடன் படங்கள் இருக்கின்றன.

அவர் கடந்த வருடம் வந்து வெற்றி பெற்ற கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக வெற்றி பெற்றுவிட்டார். இப்படத்தை அவரின் நண்பன் அருண் ராஜா காமராஜ் இயக்க ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் ஏற்கனவே மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. தற்போது மற்றொரு ஹிட் பாடலான ஒத்தயடி பாதையில பாடல் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை செய்துள்ளது. அனிருத் பாடிய இந்த பாடலை ரசிகர்கள் #25MViewsForOthaiyadiPathayila என கொண்டாடி வருகிறார்கள்.