Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் NGK படம் கன்னடத்தில் மட்டும் இத்தனை கோடியில் விற்பனையா? யார் வாங்கியது தெரியுமா

நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக NGK படம் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 1 ஆண்டிற்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி மே 31 என்பதை சமீபத்தில் தான் அறிவித்தனர்.

இதனால் இப்படத்தின் திரையரங்கு உரிமைகளை விற்கும் பணிகள் துவங்கியுள்ளன. அதன்படி சூர்யாவின் NGK படத்தின் கன்னட திரையரங்கு உரிமையை மட்டும் ரூபாய் 3.33 கோடிக்கு தீராஜ் எண்டர்ப்ரைசஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான காப்பானும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.