Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மங்காத்தா 2 படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளரா?- வெங்கட் பிரபு கூறிய தகவல்

அஜித்-வெங்கட் பிரபு இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை.

அதுபற்றி வெங்கட் பிரபுவிடம் கேட்டால் தல தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும், அவர் ஓகே என்றால் உடனே படம் இயக்கி விட வேண்டியது தான் என்று கூறி வந்தார்.

இந்த நிலையில் அஜித்துடன் படம் உறுதியானது என வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி பேட்டிகளில் கூறி வருகின்றனர். அப்படி ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு பேசும்போது, என்னுடைய படங்களுக்கு கீழ் வெங்கட் பிரபு கேம் போன்ற சின்ன லைன் வைப்பேன். அப்படி பிரேம்ஜி படங்களுக்கும் உள்ளது என்றார்.

உடனே மங்காத்தா 2 படத்திற்கு அவர் இசையமைத்தால் என்ன பெயர் வரும் என்று கேட்க அதற்கு அவர், இசை சூதாடி வைக்கலாம். இதை சொன்னதும் உடனே அவர் மங்காத்தா 2விற்கு இசையா என்று கேட்காதீர்கள் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கலகலப்பாக கூறியுள்ளார்.