ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அந்த வகையில் டிசி காமிக்ஸ் தரப்பில் கடந்த வாரம் சஷாம் படம் திரைக்கு வந்தது.
இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, சுமார் 200 மில்லியன் டாலர் வசூலை இப்படம் தாண்டியுள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் இப்படம் ரூ 1450 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது, இப்படம் ரூ 650 கோடிக்கு எடுக்கப்பட்டுது குறிப்பிடத்தக்கது.
எப்படியும் இப்படம் 300 மில்லியன் டாலர் வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.