Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் NGK செய்த சாதனை! ரசிகர்களின் மாஸான வரவேற்பு

சூர்யா ரசிகர்களின் மனதை குளிர்விக்க அவரின் 38 வது படத்தின் தலைப்பு சூரரை போற்று என வந்துவிட்டது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு NGK படத்தின் மீது உள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் அவர் கம்யூனிசவாதியாக நடித்துள்ளார்.

படத்தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை ரசிகர்கள் விடாமல் படம் எப்போது ரிலீஸ், அடுத்த அப்டேட் என்ன என கேட்டு வருகிறார்கள். நேற்று இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது.

தண்டால் காரன் என தொடங்கும் இப்பாடல் பலரையும் ஈர்த்துள்ளது. யுவன் இசையமைத்துள்ள இப்பாடலை ஒரு நாளைக்குள்ளாகவே 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதே போல தெலுங்கு பாடல் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.