Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 63வது படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட்- எப்போது அதை பார்ப்போம்?

விஜய் 63வது படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்திற்கான படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் ரசிகர்களின் ஆவலும் கூடிக் கொண்டே போகிறது.

முதன்முதலாக விஜய் ஒரு விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார், படத்திற்கான ஏதாவது ஒரு ஃபஸ்ட் லுக் வெளியாகலாமே என்று ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளார்கள்.

தற்போது இந்த படத்தில் என்ன படமாக்கப்பட்டு வருகிறது என்றால், கடந்த 2 வாரங்களாக சில கால்பந்து காட்சிகள் விஜய், விவேக், யோகி பாபு இடம்பெற நடைபெற்று வருகிறதாம். யோகி பாபு சினிமாவிற்கு வருவதற்கு முன் ஒரு கால்பந்து விளையாட்டு வீரராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த காட்சிகள் EVP பிலிம் சிட்டியில் நடந்துள்ளது, இன்னும் ஒரு வாரம் அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.