இளம் நடிகர்களில் ரசிகர்கள் அதிகம் பாலோ செய்வது சிவகார்த்திகேயனை தான். தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரை வந்து முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து நிற்கிறார்.
இவரது நடிப்பில் வரும் மே 1ம் தேதி Mr. லோக்கல் படம் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் இன்னும் இப்பட புரொமோஷன் வேலைகள் தொடங்கவில்லை, அதேபோல் படம் சம்பந்தப்பட்டு வரும் வீடியோக்களிலும் ரிலீஸ் தேதி குறிப்பிடவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என்று கூறப்படுகிறது.
இதற்கு பதில் தெளிவாக வரும் ஏப்ரல் 20ம் தேதி வெளியாக இருக்கும் இப்பட டிரைலரில் தெரிய வரும் என்கின்றனர்.