Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவில் எப்போதும் பேய் படங்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் நேற்று வெளிவந்த காஞ்சனா 3 படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் வந்தது.

படத்தின் விமர்சனத்தை பற்றி எல்லாம் யாருக்கும் எந்த கவலையும் இல்லை, எல்லோரும் போட்டிபோட்டு புக் செய்து அனைத்து காட்சிகளையும் ஹவுஸ்புல் ஆக்கிவிட்டனர்.

இந்நிலையில் திருச்சி ஏரியாவில் விஸ்வாசம் முதல் நாள் ரூ 17.5 லட்சம் வசூல் செய்தது, தற்போது காஞ்சனா 3 முதல் நாள் திருச்சியில் ரூ 17.7 லட்சம் வசூல் செய்துள்ளது.

ஆனால், இதில் ஒன்றை கவனிக்க வேண்டும், விஸ்வாசம், பேட்ட என்ற படத்தின் போட்டியுடன் வந்தது மட்டுமின்றி, திருச்சியில் விஸ்வாசத்திற்கு சிறிய தியேட்டர்களே கிடைத்தது.

அதே நேரத்தில் காஞ்சனா 3 சோலோ ரிலிஸ் மட்டுமின்றி அனைத்து பெரிய திரையரங்குகளிலும் ரிலிஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.