ராகவா லாரன்ஸ் நடிப்பு, நடனம், காமெடி என எல்லாவற்றிலும் கலக்குகிறார். அதையெல்லாம் தாண்டி இயக்கத்திலும் மாஸ் வெற்றி கண்டு வருகிறார்.
அவர் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 படம் சமீபத்தில் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. வசூலிலும் எல்லா இடங்களிலும் படத்திற்கு எந்த குறையும் இல்லை.
தமிழில் வெற்றிகண்டுள்ள இப்படத்தை ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் இயக்க இருக்கிறாராம். அதில் முன்னணி வேடத்தில் அக்ஷய் குமார் மற்றும் கைரா அத்வானி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.