தமிழ் சினிமாவின் ஒரே தல அஜித். இவரை படங்களை தாண்டி அதிகம் எங்கேயும் வெளியே காண முடியாது. தான் உண்டு தன் வேலை என இருப்பார்.
அதுவே பலருக்கு அவரை பிடிக்க காரணமாக இருந்திருக்கிறது. தற்போது அவர் ஹிந்தி பட ரீமேக்கான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் மூலம் அஜித் பாக்ஸ் ஆபிஸில் என்ன சாதனை படைக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவரது கடைசி 5 படங்கள் மொத்தமாக எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.
- ஆரம்பம்- ரூ. 135 கோடி
- வீரம்- ரூ. 118 கோடி
- என்னை அறிந்தால்- ரூ. 125 கோடி
- வேதாளம்- ரூ. 152 கோடி
- விவேகம்- ரூ. 206 கோடி
- விஸ்வாசம்- ரூ. 208 கோடி