பெரிய ஹிட்டடித்த விஸ்வாசம் படம் அந்த விஷயத்துக்கு ஒரு உதாரணம்- சிவகார்த்திகேயன் பேட்டி
அஜித் நடித்த விஸ்வாசம் படம் தான் இந்த வருடத்தின் முதல் மாபெறும் ஹிட் படம்.
அப்படம் செய்த சாதனைகள் நிறைய உள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பம் குடும்பமாக அனைவரையும் திரையரங்கிற்கு வரவழைத்த படம் விஸ்வாசம்.
வசூலில் மாஸ் காட்டிய இப்படம் ஒரு கமர்ஷியல் படம். சமீபத்தில் ஒரு பேட்டியில், கமர்ஷியல் படங்களுக்கு எப்போதுமே அழிவு இல்லை, நல்ல கதையுடன் எடுக்கப்படும் படங்கள் நல்ல வரவேற்பை பெறுகிறது.
அதற்கு ஒரு உதாரணம் விஸ்வாசம் படம், தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் படங்களில் இதுவும் ஒன்று என பேசியுள்ளார்.