Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரமாண்டத்தின் உச்சம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கா இப்படியொரு நிலைமை!

ஒரு திரைப்படம் தயாரித்து அதை வெளியிடுவதற்குள் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு போதும் போதும் என்றாகிவிடும். பல கஷ்டங்களை கடந்து ரிலீஸ் செய்தால், முதல் காட்சி முடிவதற்குள்ளேயே அந்த படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பாளரின் தலையில் இடியை இறக்கும். இந்த இணையதளத்தை முடக்க செய்யும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது

இந்த நிலையில் இதுவரை தமிழ்த்திரையுலகினரை கதற வைத்த தமிழ் ராக்கர்ஸ் அடுத்ததாக ஹாலிவுட் படக்குழுவினர்களையும் அலற வைத்துள்ளது. நாளை மறுநாள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகவுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்றே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தின் வசூல் உலக அளவில் சாதனை செய்யும், அதிலும் குறிப்பாக இந்தியா மிக பெரிய சந்தையாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியானது, மார்வெல் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இருப்பினும் இந்த படம் 3D படம் என்பதால் தியேட்டரில் சென்று பார்க்க என ஒரு பெருங்கூட்டம் இருப்பது ஒரு ஆறுதலான விஷயம்.