Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் எல்லாம் என் பிரச்சனை இல்லை! தளபதி-63 பட கதை விவகாரத்தில் உதவி இயக்குனர் ஓபன்டாக்

தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் தளபதி-63 படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் KP செல்வா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த அவர் கூறுகையில், இது முதலில் விஜய்யின் பிரச்சனை அல்ல, அட்லீ, முருகதாஸ் போன்ற இயக்குனர்களின் பிரச்சனை. நான் இந்த கதையை 2017லிலேயே முடித்துவிட்டேன். இரண்டு கதையையும் ஒத்து போகிறதா இல்லையா என்பதை நீதிமன்ற தீர்ப்பு வரும்போது தெரிந்து கொள்வீர்கள் என்று தெரிவித்துள்ளார்.