Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் படப்பிடிப்பு புகைப்படங்கள் லீக் ஆவது இப்படித்தானாம், எதிர்க்க அச்சப்படும் முருகதாஸ்!

தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தை முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகின்றார்.

இப்படத்தில் நயன்தாரா முக்கியமான ரோலில் நடிக்க, படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படங்கள் எப்படியோ சமூக வலைத்தளத்தில் லீக் ஆகி வருகின்றது.

இதுக்குறித்து விசாரிக்கையில் தர்பார் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்து வருகின்றதாம்.

அங்கு சுமார் 10 ஆயிரம் பேர் படிக்க, யாராவது ஒருவர் படப்பிடிப்பு புகைப்படங்களை எடுத்து லீக் செய்துவிடுகிறார்களாம்.

இதை எதிர்த்து கேட்கலாம் என்று நினைத்தால், அங்கு அமைத்திருக்கும் செட்டை இரவோடு இரவாக அடித்து நொறுக்கிவிட்டால் என்ன செய்வது என்று படக்குழுவும் எதுவும் பேசாமல் உள்ளார்களாம்.