Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும்படி 2.0 மிகப்பெரும் சாதனை, ரூ 1000 கோடி சாத்தியமா?

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்த படம் 2.0. இப்படம் உலகம் முழுவதும் ரூ 700 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

ஆனால், இப்படம் இந்தியாவிலேயே ரூ 1000 கோடி வசூல் செய்யும் என்று தான் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், அது முடியவில்லை.

அப்படி ஒரு வாய்ப்பு தற்போது அமைந்துள்ளது, ஆம், 2.0 இந்த மாதம் சீனாவில் மிகப்பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது.

இப்படம் அங்கு சுமார் 56 ஆயிரம் திரையரங்கில் வரவுள்ளது, இதுவரை வேறு எந்த இந்தியப்படமும் இத்தனை திரையரங்கில் அங்கு ரிலிஸாகவில்லையாம், மேலும், ரூ 1000 கோடி அங்கு வசூல் செய்யுமா? என்றும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.