Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவெஞ்சர்ஸ்- என்ட் கேம் பட நடிகர்களின் சம்பளம் எல்லாம் இத்தனை கோடியா?- வாய் பிளக்கும் ரசிகர்கள்

அவெஞ்சர்ஸ்- என்ட் கேம் பட நடிகர்களின் சம்பளம் எல்லாம் இத்தனை கோடியா?- வாய் பிளக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவை ஒரு ஹாலிவுட் படம் இப்போது ஆட்டிவைத்து வருகிறது.

அவெஞ்சர்ஸ் என்ட் கேம் படத்திற்கு தமிழ் மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். படம் சமூக வலைதளங்களில் லீக் ஆனாலும் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

படம் தற்போது ரூ. 300 கோடியை நெருங்கி வருகிறது, ரூ. 400 கோடி வசூலிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இப்படத்தின் நடிகர்களின் சம்பள விவரத்தை பார்ப்போம்.

அயர்ன்மேனாக நடித்த ராபர்ட் டவ்னி ஜூனியர் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வாரில் நடிக்க ரூ. 524 கோடி சம்பளம் வாங்கினாராம். மேலும் ஸ்பைடர்மேன்: ஹோம்கமிங் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார் அவர். நாள் ஒன்றுக்கு அவர் 5 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கியுள்ளார்.

தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கேப்டன் அமெரிக்கா கிறிஸ் இவான்ஸ், ஸ்கார்லட் ஜொஹன்சன் ஆகியோர் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தில் நடிக்க ரூ. 139 கோடி சம்பளம் வாங்கியுள்ளனர்.