Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காப்பியடித்து எடுக்கப்பட்டதா மகேஷ்பாபுவின் மகரிஷி? அதிரடியாக புகார் கூறிய இயக்குனர்

தமிழ் திரையுலகத்தில் தான் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் கதைகள் காப்பியடிக்கப்பட்டவை என பட வெளியீடு நேரத்தில் பரபரப்பு உருவாகும். அது இப்போது தெலுங்கு திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த மகரிஷி படம் வேறு ஒரு இயக்குனரின் கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு இயக்குனராக ஸ்ரீவாஸ், சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதைதான் மகரிஷி படத்தின் கதையாம். படத்தை பார்த்த இயக்குனர் ஸ்ரீவாஸ் அதிர்ச்சியடைந்து தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜுவைத் தொடர்பு கொண்டுள்ளார்.

ஸ்ரீவாஸ் எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாமல் இருக்க அவருக்கு குறிப்பிட்ட தொகையும், ஒரு படத்தை இயக்க வாய்ப்பும் தருவதாக தில் ராஜு உறுதியளித்தாராம். அதற்கு ஸ்ரீவாஸ் சம்மதித்துவிட்டார் என்றும் ஒரு தகவல் டோலிவுட்டில் உலா வருகிறது.