Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியளவில் 20வது இடத்தில் தனுஷ், வேறு எந்த தென்னிந்திய நடிகரும் இல்லை

தனுஷ் கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார். இவரின் வளர்ச்சி வருடத்திற்கு வருடம் அதிகமாகிக்கொண்டே செல்கின்றது.

இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் மாரி-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

ஆனால், அதே நேரத்தில் இப்படத்தில் இடம்பெற்ற ரவுடிபேபி பாடல் மிகப்பெரும் வெற்றியை பெற்றது, சுமார் 450 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்தியளவில் அதிகம் பேர் பார்த்த பாடல்களில் ரவுடிபேபி 20வது இடத்தில் உள்ளது, இதில் வேறு எந்த தென்னிந்திய நடிகர் படங்களின் வீடியோவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.