Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகரிஷி தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா! மகேஷ்பாபு வேற லெவல் சாதனை

மகேஷ்பாபு நடிப்பில் மகரிஷி படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மகரிஷி ஆந்திரா, தெலுங்கானா தாண்டி தமிழகத்திலும் வசூல் சாதனை செய்துள்ளது, இப்படம் சென்னையில் மட்டும் ரூ 64 லட்சம் வசூல் செய்ய, செங்கல்பட்டு பகுதியில் ரூ 1.21 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 3 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மகேஷ்பாபுவின் வளர்ச்சி தமிழகத்தில் படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே தான் செல்கின்றது.

மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ 100 கோடி வசூலை கடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.