அஜித் நேர்கொண்ட பார்வை என்ற முக்கிய படத்தில் நடித்து வருகிறார். ஏன் முக்கிய படம் என்றால் தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமையை பற்றி பேசும் படமாக அமைந்துள்ளது.
அதுவும் அஜித் போன்ற பெரிய நடிகர் இது பற்றி பேசுவது கண்டிப்பாக கவனிக்கப்படும் என்று ஒரு நம்பிக்கை. இப்படத்தை தொடர்ந்து தனது 60வது படத்தையும் வினோத்திற்கே இயக்கும் வாய்ப்பை தல கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தக்கட்டமாக வரும் செய்தி என்னவென்றால் அஜித்தின் 60வது படத்திற்கு ஜிப்ரான் இசை என்கின்றனர். ஏற்கெனவே ஜிப்ரான் அஜித்துடன் எடுத்த புகைப்படம் போட்டு நாம் ஒரு நாள் பணிபுரிவோம் என்று அஜித் கூறியதாக பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.