தளபதி-63ல் விஜய்யின் முழுப்பெயர் இது தான், அது தான் டைட்டிலும் கூட- சுவாரஸ்ய அப்டேட்
திரைப்படம் by Tony
தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் புட்பால் கதையம்சம் கொண்டது என அனைவருக்கும் தெரிந்தது தான்.
இதற்காக சென்னையில் பிரமாண்ட மைதானம் செட் அமைத்து படத்தை அட்லீ எடுத்து வருகின்றார். இப்படத்தில் விஜய்யின் பெயர் க்ளம்ண்ட் மைக்கில், அதன் சுருக்கமாக படத்தின் டைட்டில் CM என்று இருக்கும் என கூறப்படுகின்றது.
ஏற்கனவே விஜய் படங்கள் சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது, அந்த வகையில் இந்த படத்தின் டைட்டிலே சர்ச்சையாக இருப்பது படத்தின் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்யும் என கூறப்படுகின்றது.