Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் கொடுத்த ஒரு பெரும் ஹிட்! ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் கொண்டாடும் சாதனை

விஜய் தற்போது எல்லாரும் கொண்டாடும் மாஸான நடிகராக உயர்ந்துவிட்டார். அவரின் படங்களுக்கு என பெரிய மார்க்கெட் இருக்கிறது. ஹிட், சூப்பர் ஹிட், மெகா ஹிட் என பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

அவரின் படங்களின் வரிசையில் அனைவராலும் மறக்க முடியாத ஒன்று குஷி. இது அவருக்கு சினிமாவில் ஒரு தனி இடத்தை பெற்றுத்தந்தது. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான இப்படம் 175 நாட்கள் ஓடியதாம்.

ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜய குமார் என பலர் நடித்திருந்தனர். படத்தில் தேவா இசையில் வந்த பாடல்களும் ஹிட். ஜோதிகாவுக்கு ஃபிலிம் ஃபேர் விருது, தேவாவுக்கு தமிழக அரசின் விருது என கிடைத்தது.

இன்றளவும் பேசப்படக்கூடிய படமான குஷி இன்று 19 ஆண்டுகளை எட்டியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் #19yearsofblockbusterkushi என கொண்டாடி வருகிறார்கள்.