Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தால் என் வாழ்க்கையில் அனுபவிக்காததை அனுபவித்தேன்- பிரபல நடன இயக்குனர்

இந்த வருடம் பொங்கலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். இந்த சினிமாவை தங்களது படங்கள் மூலம் ஆளும் ரஜினி மற்றும் அஜித்தின் படங்கள் ஒன்றாக வெளியாகி இருந்தது.

படங்களுக்கு எந்த குறையும் இல்லை வசூலிலும் அமோகமான கலெக்ஷன். அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அடிச்சுதூக்கு என்ற பாடல் படு பிரபலம், இறுதி நடனம் யாராலும் மறக்க முடியாதது.

இந்த பாடலுக்கு நடனம் அமைத்த கல்யாண் ஒரு பேட்டியில், விழுப்புரம் சென்றிருந்தேன் அப்போது உறவினர்களுடன் விஸ்வாசம் பார்க்க சென்றேன்.

அப்போது அங்கிருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக அப்படி வந்து பாராட்டி பேசினார்கள். என் வாழ்க்கையில் நான் அதுபோல் ஒரு தருணத்தை அனுபவித்ததில்லை. பாடல் செமயாக இருந்தது, அஜித்தின் தவறாக பேசியவர்கள் வாயை அடைத்துவிட்டீர்கள் என்றெல்லாம் கூறினார்கள் என்றார்.