Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆயிரத்தில் ஒருவனை தொடர்ந்து செல்வராகவன் எடுக்கவிருக்கும் அடுத்த பிரமாண்டம்

செல்வராகவன் தமிழ் சினிமாவின் மிக தரமான படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் அடுத்த வாரம் என்ஜிகே படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பில் உள்ளது, இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் செல்வராகவன் கலந்துக்கொண்டு வருகின்றார்.

அப்போது அவரிடம் உங்களின் கனவுப்படம் என்ன? என்று கேட்க, பொன்னியின் செல்வன் தான் என்னுடைய கனவுப்படம், அதை தான் மணி சார் எடுக்கப்போகிறார்.

அதனால், தற்போதைக்கு உடையார் நாவலை படமாக்க விருப்பம் என கூறியுள்ளார், மேலும், உடையார் நாவலை படமாக்கினால், ஆயிரத்தில் ஒருவனை விட மிகப்பிரமாண்டமாக வரும் என கூறப்படுகின்றது.