Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் வெற்றி பெற்ற ரஜினியின் முத்து படம் உருவான ரகசியம்! இயக்குனரே வெளியிட்ட தகவல்

ரஜினி நடிப்பில் கடந்த 1995ல் வெளியாகியிருந்த படம் முத்து. ரகுவரன், சரத்பாபு, மீனா, ராதாரவி, செந்தில், வடிவேலு என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்தார்.

இந்தியா மட்டுமில்லாமல் ஜப்பான் வரை பெரும் வெற்றி பெற்ற இப்படம் உருவான கதையை சமீபத்திய பேட்டி ஒன்றில் கே.எஸ்.ரவிகுமார் கூறியுள்ளார்.

அதில், எனது நாட்டாமை படம் வெளியாகியிருந்த நேரம். அப்போது பாட்ஷா படப்பிடிப்பில் இருந்த ரஜினி சார் நாட்டாமை படம் ரொம்பவும் பிடித்துப்போய் இம்ப்ரஸ் ஆகிவிட்டார். ஒருநாள் என்னை அழைத்தார். 'ரவி, நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் வேலை பார்க்கணும்' என்று வாய் வார்த்தையாக சொன்னதோடு நிற்கவில்லை.

கேரளாவில் வெளிவந்த தேன் மாவின் கொம்பத்து என்ற மலையாள படத்தின் தமிழ் உரிமையை வாங்கி வைத்து இருப்பதாக சொன்னார். 'அழகான ஒரு ஹீரோயினை முதலாளி, தொழிலாளி இருவருமே காதலிக்கிறார்கள் என்பதே அந்த மலையாள படத்தின் கதை. 'என்கிட்டே இருக்குற மலையாள படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை மட்டும் வச்சுக்கிட்டு உங்கள் விருப்பத்துக்குத் திரைக்கதையை நீங்களே தயார் செய்யுங்க ரவி' என்று சொல்லிவிட்டார். அப்படி உருவானது தான் முத்து என கூறினார்.