Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கில் ரீமேக் ஆகிறது பெரும் வெற்றி பெற்ற கனா! தலைப்பு என்ன தெரியுமா

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்திருந்த படம் கனா. பெண்களின் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியிருந்த இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் சில படங்களில் காமெடியனாக நடித்துள்ளவருமான அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்த இப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாம். இதிலிலும் ஐஸ்வர்யா ராஜேஷே கதாநாயகியாக நடிக்கவுள்ள நிலையில் இந்த ரீமேக் படத்திற்கு கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என தலைப்பிட்டு மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.