Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனி கபூர்- ஏன் தெரியுமா?

மறைந்த ஸ்ரீதேவி அவர்களிடம் கொடுத்த வாக்கை தற்போது அஜித் செய்து முடித்துள்ளார். அவர்களது தயாரிப்பில் தான் படம் நடித்துக் கொடுப்பதாக அஜித் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது.

அதன்படி நேர்கொண்ட பார்வை என்ற படத்தை அஜித் நடிக்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் அதாவது அஜித்தின் 60வது படத்தையும் அவரே தான் தயாரிக்க இருக்கிறார்.

அண்மையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் திரைப்படம் சீனாவில் வெளியாகி இருந்தது, அங்கு படத்திற்கு செம வரவேற்பு என்கின்றனர், இதனால் ரசிகர்கள் .#SrideviScoresCentury என்ற டாக்கை டிரண்ட் செய்துள்ளனர்.

போனி கபூர் அதை கவனித்து ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.