Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு யார் இசையமைப்பாளர்? செல்வராகவன் ஓபன் டாக்

செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல புதிய படைப்புக்களை கொடுப்பவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

அந்த அளவிற்கு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த படம், இப்படம் அப்போது ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உள்ளதாக பலராலும் பேசப்பட்டது.

தற்போது ரீரிலிஸ் ஆகி கூட அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனது, இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையும் பேசப்பட்டது.

சமீபத்தில் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு யார் இசையமைப்பாளர்? என்று கேட்டனர்.

அதற்கு அவர் கண்டிப்பாக ஜி.வி தான், ஏனெனில் அது அவருடைய படைப்பும் கூட என பதில் அளித்துள்ளார்.