Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019 இதுவரை வந்த படங்களில் இந்த 4 படம் மட்டுமே ஹிட்- ஷாக் தகவலை கூறிய திருப்பூர் சுப்ரமணியம்

சினிமா என்பது இந்தியர்களின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு. அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு, ஆனால், வருடத்திற்கு வருடம் தமிழ் சினிமாவின் வெற்றி சதவீதம் குறைந்துக்கொண்டே வருவது அனைவருக்கும் வருத்தம் தான்.

அந்த வகையில் இந்த வருடம் தொடக்கமே பேட்ட, விஸ்வாசம் என இரண்டு மெகா ஹிட் படங்கள் வந்தது, இந்த இரண்டு படங்கள் மட்டுமே தமிழகத்தில் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது.

இதனால், கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் கொண்டாட்டம் என்று பார்த்தால் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை பேட்ட, விஸ்வாசம், தடம், காஞ்சனா-3 ஆகிய 4 படங்கள் மட்டுமே அனைவருக்கும் லாபத்தை கொடுத்தது என்று. மேலும், 90 சதவீத படங்கள் தோல்வி தான் என்றும் கூறியுள்ளார்.