Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் கடும் வீழ்ச்சியில் தமிழ் படங்கள், இந்த வருடம் ஒரு படம் தான் ஹிட்டாம்

தமிழ் சினிமா தமிழ்நாடு தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல பகுதிகளில் மார்க்கெட் உள்ளது. அதிலும் ரஜினி, விஜய், சூர்யா, அஜித் போன்ற நடிகர்களுக்கு தென்னிந்தியாவில் அனைத்து இடங்களிலும் மார்க்கெட் உள்ளது.

இதில் கேரளாவில் விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் மோகன்லாலுக்கு இணையானவை, ஆனால், சமீபத்தில் வந்த எந்த படங்களும் கேரளாவில் ஹிட் ஆகவில்லையாம்.

விஜய்யின் சர்கார், ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்ஜிகே, விக்ரமின் சாமி-2 என பெரிய படங்கள் அனைத்தும் தோல்வி தானாம்.

இந்த வருடம் தடம் மட்டுமே கேரளாவில் ஹிட் ஆனதாக கூறப்படுகின்றது. இதனால், தமிழ் சினிமா கேரளாவின் பெரிய மார்கெட்டை இழந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.