Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் பார்த்த அஜித் சொன்ன ஒரு வார்த்தை- வினோத் பகிர்ந்த நிகழ்வு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்திற்கான டப்பிங் வேலைகள் வரை பாதி முடிந்துள்ளது.

அடுத்தடுத்து புரொமோஷனில் படக்குழு இறங்கி விடுவார்கள் என்பது தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது.

2.04 நிமிடம் கொண்ட இந்த டிரைலரின் ஒவ்வொரு நொடியையும் ரசிகர்கள் ரசித்தார்கள் என்பது உண்மை. 50 படங்களுக்கு மேல் பேசிய மொத்த டயலாக்கையும் சேர்ந்து ஒரே படத்தில் பேச வைத்துவிட்டீர்களே என சிரித்துக் கொண்டே அஜித், வினோத்திடம் கூறியிருக்கிறார்.

பின் டப்பிங்கின் போது படம் பார்த்து சந்தோஷப்பட்டு கட்டிப்பிடித்து அஜித் நன்றி கூறியதாக வினோத் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.