Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லையா நேர்கொண்ட பார்வை! இது தான் காரணமா?

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்து வந்தது.

அதற்கு ஏற்றார் போல் ட்ரைலரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, ஆனால், என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, எதிர்ப்பார்த்த அளவிற்கும் ட்ரைலர் ஹிட்ஸ் வரவில்லை.

ஆம், விஸ்வாசம் ட்ரைலர் எல்லாம் 30 மில்லியனை கடந்து, 1 மில்லியனுக்கு மேல் லைக்ஸுகளை குவித்தது.

ஆனால், நேர்கொண்ட பார்வை இன்னும் 10 மில்லியனை கூட தொடவில்லை, லைக்ஸும் தற்போது வரை 8 லட்சம் தான் வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இது மற்ற அஜித் படங்களை போல் மசாலா படம் இல்லை, மேலும், காலை அறிவித்துவிட்டு, மாலையே ட்ரைலர் விட்டதும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது.

எது எப்படியோ அஜித் கிங் ஆப் ஓப்பனிங், வசூலில் தெரிந்துவிடும், இந்த படத்தின் உண்மையாக எதிர்ப்பார்ப்பு.