Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அர்ஜூன் ரெட்டி ரீமேக் வசூலில் பெரும் சாதனை! பின்னுக்கு தள்ளப்பட்ட முக்கிய படம் - முதல் நாள் வசூல் இதோ

தெலுங்கில் ஹிட்டாகி பெரும் வரவேற்பை பெற்று இளம் ரசிகர்கள், ரசிகைகளால் கொண்டாடப்பட்ட படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு நேற்று வெளியானது.

கபீர் சிங் என பெயர் வைக்கப்பட்டு ஹீரோவாக ஷாகித் கபூரும், ஹீரோயினாக கைரா அத்வானியும் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் நாளான வெள்ளியன்று இப்படம் ரூ 20 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் அவரும் தீபிகா படுகோனும் இணைந்து நடித்த பத்மாவத் படத்தின் வசூலை ( ரூ 19 கோடி) பின்னுக்கு தள்ளியுள்ளது.

அதே போல அஜய் தேவ் கண் நடித்த டோட்டல் தமால் படத்தின் வசூலையும் ( ரூ 16 கோடி) முந்தியுள்ளது.