Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனை நோக்கி பாயும் தோட்ட தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதை பாருங்க

எனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய படம். இப்படம் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் உள்ளது.

படம் எப்போது வரும் என யாருக்குமே தெரியாத நிலை, இந்நிலையில் இப்படத்தை சமீபத்தில் சிந்துபாத் படத்தை வெளியிட்ட நிறுவனம் தான் வாங்கியுள்ளது.

அதே நிறுவனம் தான் தமிழகத்தில் பாகுபலி-2 படத்தை வெளியிட்டது, அப்போது ஏற்பட்ட சில பிரச்சனைகளால் சிந்துபாத் ரிலிஸ் செய்ய முடியவில்லை.

அந்த பிரச்சனை ஒரு வழியாக முடிந்து சிந்துபாத் வந்தாலும், அடுத்து மீண்டும் எனை நோக்கி பாயும் தோட்டாவிற்கு இந்த பிரச்சனை மீண்டும் தொடங்கும் என கூறப்படுகின்றது.